Saturday, October 31, 2009

மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

கும்பிடக் கும்பிடக் கொழும்பில் அடிவாங்கிக் கரையொதுங்கிக் கிடக்கிறது தமிழரின் மானம்...குத்துவிளக்கேற்றிக் குடம்குடமாய் பால் சொரிந்து மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

2 comments:

Anonymous said...

அக்கா,இது
பேரழிவுக்குப் பின்னரான இனப் படுகொலை வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் தெரிவித்துள்ளார்கள்.

உத்தியோகத்தர் உட்பட மூவர் கடலினுள் வைத்துத் தாக்கியதாகவும், அந்த தமிழ் இளைஞர் தன்னை விட்டுவிடும்படி கையெடுத்துக் கும்பிட்ட போதும் அவர் தொடர்ந்தும் தாக்கப்பட்டதனால் அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் சாட்சிக்ள் தெரிவிக்கின்றன.

மனநோயாளியான அந்த இளைஞர் தமிழர் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு சிங்கள இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.என்ற வாதத்தை வைத்த என் போன்றோருருக்கு இது எல்லாம் பிழையான வாதமென தமிழனைக்காட்டிக்கொடுத்துப் பிழைப்பு நடாத்தும் ஊடகங்கள் அறைகூவுகின்றன. இது என்ன பிழைப்பு??????
சுழுந்தி

வாக்குமூலம் said...

ஆதவன்இப்படி எழுதியுள்ளார்:
நாங்கள் எவரதும் வாழ்விலும் பிழைப்பு தேடுபவர்களல்ல. ஆனால் அசம்பாவிதங்கள் நடந்து முடிந்துவிட்டன. முள்ளிவாய்காலுக்கும் இக்கொலைக்கும் முடிச்சுப்போட்டு இன்னொரு இரத்தவாற்றை கொழும்புவில் உருவாக்கிவிடாதீர்கள் என்பதே எனது ஆதங்கம்.
அவரது சடலம் களனி மலர்ச்சாலையில் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை, மாவலகம என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாகஅங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.உண்மையில் அவர் வன்னித் தமிழருமல்ல.

இது குறித்து பொலிஸ் தரப்பில், “மேற்படி கொலை தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய கன்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்எனவும் ஏனைய நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கின்றதுஎனவும் கூற்ப்படுகிறது. இந்த அசம்பாவிதம் தவறு. ஆனால் அதை ஊதிப்பெரிதுபடுத்தி தங்கள் பிழைப்புதேடமுயற்சிக்கவேண்டாமென்க் கேட்டுகொள்கிறேன்.//
என மின்னஞ்சலில் கடிதம் அனுப்பியுள்ள ஆதவனுக்கு உங்கள் குடும்பத்தில் இப்படி அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்க மாட்டீர் என்பதே இப்போதைய எனது பதில்.

ரமோனா

Post a Comment