Friday, October 9, 2009

சமாதானப் பரிசு !




எந்தச்சமாதானம் - இங்கு
நிறுவப்பட்டிருக்கிறது

எத்தகைய மாற்றம் - இங்கு
நிகழ்ந்து விட்டிருக்கிறது.

ஊர் எரிய வேவு பார்த்ததையும்,
ஊர், ஊராகச்சென்று
மாலைவாங்கியதையும் தவிர......




அமெரிக்க டாங்கிகளின்
இரும்புச் செயின்களில்
ஆப்கான் குழந்தைகள் - இன்னும்
நசுங்கிக் கிடக்கையில்........

சமாதானப் பரிசு
அறிவிக்கப்பட்டுவிட்டது.

உலகத்து இராசாவிற்கு
இன்னுமோர் கொம்பு.

வல்லமையுள்ளவனுக்கே
சமாதான விருதென்கிறது
நோபலிற்கான தேர்வுக்குழு !


இனி என்ன??
எதையும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும்
ஒப்புக்கொள்ளவேண்டியதுதான்!!!!

1 comment:

டொல்பின் said...

I am surprised
By: n.krishna | 09-Oct-2009 Reply |
The only peace effort Obama made successfully is with Hilary Clinton and Oral Clinton. The nobel peace prize has lost its relevance now.

உண்மையில் ஒபாமாவிற்கான விருது ஒரு கண்துடைப்பு மட்டுமே.சமாதானம் பற்றிய கருத்துச் சொல்பவர்களுக்கும், நாட்டின்தலைவர்களுக்கும் நோபல் பரிசு கொடுப்பதாயின் எத்தனை பேர் என்று
கொடுப்பார்கள்.போரை முடிவாக்கிய மகிந்தவிற்கும்,சோனியாவிற்கும் அடுத்த விருது அறிவிப்பார்கள்.

Post a Comment